1. தாங்கள் தெரிவிக்கும் பிறந்த தேதி, பிறந்த மணி, பிறந்த நிமிடம், பிறந்த நொடி, பிறந்த இடம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். இல்லையெனில் நிர்வாகம் பொறுப்பேற்காது.
2. அவ்வாறு சரியாக கொடுக்காத போது கணிக்கப்பட்ட ஜாதகம் தவறாக இருக்கும். அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
3. அவ்வாறு கணிக்கப்பட்ட ஜாதகத்தை கொண்டு பலன் நிர்ணயிக்கும் போது பலன் தவறாக அமையும். அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
4. இது முற்றிலும் திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜாதகம் ஆகும். வாக்கிய பஞ்சாங்க ஜாதகத்திற்கும் இதற்கும் மாறுபாடு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
5. மற்ற ஜாதக கணிப்புகளுடன் ஒப்பிடும் போது பகை அடிப்படையில் மாற்றங்கள் இருக்கும் மற்றும் நட்சத்திர நிலைகளின் அடிப்படையில் அமைந்துள்ள ராசிகளில் கிரக நிலைகள் மாறுபடலாம் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
6. கணிக்கப்பட்ட ஜாதகம் எவ்வாறு வேண்டுமென (PDF format / Paper print) தெளிவாக தெரிவிக்க வேண்டும். (ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தொகை ஆகும். கலர் / கருப்பு, பிரிண்ட் மற்றும் PDF வடிவம் உடன்).
7. ஜாதக பலன் நேரில் கேட்க வருபவர்கள் தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு சரியான நேரத்தில் முன்பே வர வேண்டும். அவ்வாறு வரவில்லை எனில் நிர்வாகம் மற்றொரு தேதி மற்றும் நேரம் தெரிவிக்கும்.
8. ஜாதக பலன் WhatsApp மூலம் வேண்டுவோர் தாங்கள் கேட்கும் தேதி மற்றும் நேரம் இருந்தால் அந்த தேதி மற்றும் நேரம் ஒதுக்கப்படும். இல்லையெனில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்படும் 3 தேதி மற்றும் நேரங்களில் ஏதேனும் ஒன்றை சரியாக தெரிவிக்க வேண்டும்.
9. ஜாதகம் மட்டும் கணிக்கவா அல்லது ஜாதகம் கணித்து அதனுடன் பலன் வேண்டுமா என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
10. நம் முன்னோர்கள் இவ்வுலகிற்கு அளித்துள்ள தகவலின் அடிப்படையில் இயற்கை எனும் பரிபூரணத்தின் அருளால் கிடைத்த ஞானத்தின் மூலம் ஜாதக பலன்கள் கணிக்கப்பட்டு தங்களுக்கு சொல்லப்படுகின்றன. இதுவே இறுதியானது என தாங்கள் எடுத்துக் கொள்ளுவது ஏற்றதல்ல என தெரிவிக்கப்படுகிறது.
11. ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வைத்து நான் தெரிவிக்கும் பலன் என் ஞானத்திற்கு உட்பட்டது. அவை சரி என தங்களுக்கு தோன்றினால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
12. தாங்கள் கொடுக்கும் கட்டணம் ஒரு தடவைக்கு மட்டுமே.
13. தாங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.